Home » » செயலிழந்திருந்த PCR இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு கண்டறியப்பட்டது!!

செயலிழந்திருந்த PCR இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு கண்டறியப்பட்டது!!


கொழும்பு கிழக்கு வைத்தியசாலையில் செயலிழந்திருந்த PCR இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு கண்டறியப்பட்டுள்ளது.


இலங்கைக்கான சீன தூதரகத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த PCR இயந்திரம் சீனாவின் முன்னணி மருத்துவ உபகரண உற்பத்தி நிறுவனமான BGI genomics நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டதாகும்.

இந்த நிலையில் குறித்த PCR இயந்திரத்தை சீர் செய்ய சீனாவின் உதவியை இலங்கை அரசாங்கம் கோரியிருந்தது.

இதன்படி குறித்த PCR இயந்திர உற்பத்தி நிறுவனமான BGI genomics நிறுவன தொழில் நுட்பவியலாளர்கள் நேற்று முன்தினம் இரவு நாட்டை வந்தடைந்ததாக சீன தூதரகத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சுமார் 10 மணி நேர ஆய்வின் பின்னர் PCR இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு கண்டறியப்பட்டுள்ளதாக சீன தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த பி சி ஆர் இயந்திரத்தின் துல்லியத் தன்மையை பரிசோதிக்க பல சுற்று சோதனைகள் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் எதிர்வரும் திங்கட்கிழமைக்கு பின்னர் குறித்த பி சி ஆர் இயந்திரத்தை மீள பயன்படுத்த முடியுமென எதிர்பார்ப்பதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

மேலும் குறித்த பி சி ஆர் இயந்திரத் தொகுதி கடந்த ஜூன் மாதம் இலங்கை அரசாங்கத்தின் அவசர கோரிக்கைக்கு அமைய சீனாவின் தொழில்நுட்ப உதவியுடன் நிறுவப்பட்டது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இதுவரை அந்த பி சி ஆர் இயந்திரத்தின் மூலம் சுமார் 26 ஆயிரம் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் அந்தத் தொழில்நுட்ப நிறுவனம் 66 நாடுகளுக்கு தமது உற்பத்திகளை விநியோகித்து வருவதாகவும் அவுஸ்திரேலியா ஹாங்காங் மற்றும் சேர்பியா உள்ளிட்ட நாடுகளுக்கு தமது பி சிஆர் இயந்திரங்களை விநியோகித்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த பி சி ஆர் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாட்டில் பி சி ஆர் முடிவுகளை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக பரவலாக கருத்துக்கள் முன்வைக்கப் பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |