கொரோனா அச்சநிலை காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை(30/10/2020) மூடப்பட்ட மட்டக்களப்பு- ஆரையம்பதி BRANDIX ஆடைத் தொழிற்சாலையானது மீண்டும் நாளை திறக்கப்படும் என கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அ.லதாகரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி மற்றும் மாவடிமுன்மாரியில் கண்டறியப்பட்ட இரு கொரோனோ தொற்றாளர்களின் நெருங்கிய உறவினர்கள் ஆரையம்பதியில் அமைந்துள்ள BRANDIX ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருவதையடுத்து குறித்த ஆடைத்தொழிற்சாலையை தற்காலிகமாக வெள்ளிக்கிழமை (30) திகதியில் இருந்து 3 நாட்களுக்கு மூடி கிருமிநாசினி விசிறி சுத்தப்படுத்துமாறு கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அழகையா லதாகரன் அறிவித்தமையை அடுத்து குறித்த ஆடைத் தொழிற்சாலையானது மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையிலேயே, குறித்த ஆடைத்தொழிற்சாலை மீண்டும் நாளை திங்கள் கிழமை (2020/11/02) திறக்கப்படவுள்ளதாகவும், அங்கு தொழில் புரியும் அனைத்து பணியாளர்களுக்கும் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை கடைப்பிடித்து பணிகளுக்கு அழைக்கப்பட வேண்டும் எனவும், சுகாதார நடைமுறைகள் இறுக்கமாக கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்
0 comments: