Advertisement

Responsive Advertisement

அடுத்த வாரம் முதல் கடுமையான கெடுபிடி: அமைச்சர் வெளியிட்ட கருத்து

 


கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்தும் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் அடுத்த வாரம் தொடக்கம் கடுமையான முறையில் செயற்படுத்தப்படும் என காணி விவகார அமைச்சர் எஸ்.எம் சந்திரசேன தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் அன்றாட செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியடும் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்தத் தெரிவிக்கையில்,

கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த மேல் மாகாணம் உட்பட பெரும்பாலான பகுதிகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

பொது மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மாத்திரமே தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையினை வெற்றிக் கொள்ள முடியும்.

மேல்மாகாணத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தொடர்பில் இவ்வாரம் இறுதி தீர்மானம் எடுக்கப்படும். சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் எதிர்வரும் வாரம் தொடக்கம் கடுமையாக செயற்படுத்தப்படும்.

பொது மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மாத்திரமே நெருக்கடி நிலையினை வெற்றிக் கொள்ள முடியும். ஆகவே பொது மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments