அம்பாறை மாவட்ட மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருவதாகவும், மக்களின் அடிப்படை வசதிகளில் பல குறைபாடுகள் காணப்படுவதாகவும் கருணா என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில், அபிவிருத்திக் குழு பிரச்சினை, வீதி அபிவிருத்தி பிரச்சினை, வீடற்றோர் பிரச்சினை, காணி அபிவிருத்தி பிரச்சினை போன்ற பாரிய பிரச்சினைகள் இருக்கின்றன. இவற்றையெல்லாம் இயன்றளவு தீர்ப்பதற்கான அதிகாரத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எனக்கு வழங்கியுள்ளார்.
அத்துடன் இங்குள்ள பிரச்சினைகளை உடனடியாக தீர்த்து குறைபாடுகளை நிவர்த்தி செய்து மேலும் தேவைகள் தொடர்பில் நேரடியாக தனது கவனத்திற்கு கொண்டு வருமாறும் எனக்கு பணித்துள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.
அம்பாறை வீரமுனை பகுதியில் 232 தமிழர்கள் கொல்லப்பட்டு இன்றுடன் 30ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அதன் நினைவுத் தூபிக்கு முன்பாக இன்று கருணா விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினார்.
இதன் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
0 Comments