Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுவின் முதலாவது கூட்டம் பல இழுபறிகளின் பின்னர் இன்று நடைபெற்றது...!!





காத்தான்குடி லத்தீப்)



புதிய அரசாங்கம் பதவியேற்ற பின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான மாவட்ட அபிவிருத்தி இணைப்புக் குழுவின் முதலாவது கூட்டம் இன்று மாவட்டச் செயலகத்தில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இடம் பெற்றது.

மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன், பதவி வழி இணைத் தலைவரான கிழக்கு மாகாண ஆளுநர் திருமதி.அனுராதா சம்பத் ஆகியோரது இணைத் தலைமையில் இந்த மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரன், இராஜபுத்திரன் சாணக்கியன், மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் உட்பட மாகாண மாகாணசபை மாவட்ட உள்ளூர் திணைக்களங்களின் மாகாண செயலாளர்கள், மாவட்ட உள்ளூர் திணைக்களங்களின் தலைவர்களும் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் உட்பட பாதுகாப்பு படை அதிகாரிகளும் பிரசன்னமாகியிருந்தனர்.

இந்த முதலாவது மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் நிதி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட 4127 திட்டங்களுக்காக சுமார் 891 கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்றங்கள் இங்கு ஆராயப்பட்டன.

இதில் 1898பூர்த்தி செய்யப்பட்டதாகவும் இதற்கென 298 கோடி ரூபாய் செலவிட்டு இருப்பதாகவும் மாவட்ட திட்டமிடல் பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments