Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஜேர்மன் கொரோனா தடுப்பூசி வெற்றியளிக்குமா? இலங்கை பல்கலைக்கழக பேராசிரியர் வெளியிட்ட தகவல்...!

 


ஜேர்மன் மற்றும் அமெரிக்க நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் கொரோனா தடுப்பூசி வெற்றியளிக்கும் என்பது தொடர்பில் சரியான தீர்மானத்திற்கு வருவதற்கு தாமதமாகும் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நீலுகா மலவிகே தெரிவித்துள்ளார்.


நேற்றைய தினம் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலதிக தகவல் வெளியிட்டவர்,

சாதாரணமாக தடுப்பூசி ஒன்றை தயாரிப்பதற்கு 5 ல் இருந்து 6 வருடங்களாகும் . சில நேரங்களில் 10 வருடங்களாகும். இந்த பரிசோதனையை 2 மாதங்கள் கூட செய்யவில்லை. 2 மாத தரவுகளில் எங்களால் உறுதியான தீர்மானத்திற்கு வர முடியாது. குறைந்த பட்சம் 2 ல் இருந்து 3 வருடங்களாவது ஆய்வு செய்த பின்னர் இந்த தடுப்பூசி வெற்றியளிக்குமா! இல்லையா? மற்றும் அது எவ்வளவு பாதுகாப்பானது என்று பார்க்க முடியும்.

அந்த தடுப்பூசியை 10 பேருக்கு வழங்கும் போது அதில் 9 பேரை கொரோனா தொற்றாமல் பாதுகாக்க முடியும் என கூறியே அவசர அனுமதி பெற முன் வைக்கப்பட்டுள்ளது.

தற்போது வரையில் அந்த தடுப்பூசி 43500 பேருக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் அதில் ஒருவரும் உபாதைகள் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

தடுப்பூசி மூலம் கொரோனா வைரஸ் தொற்றுடன் போராடுவதற்கு மனிதனின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கட்டமைப்பிற்கு பயிற்சியளிக்கப்படுகின்றது.

இந்த புதிய தடுப்பூசி RNA தடுப்பூசி வகையை சேர்ந்ததாகும். வைரஸின் சிறிய மரபணு குறியீடுகள் தடுப்பூசிக்கு பயன்படுத்தப்படுகின்றன.

தடுப்பூசி செலுத்தப்படும்போது, ​​வைரஸ் மனித உடலில் உருவாக்கப்பட்டு, உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு, அதை ஒரு வெளிப்புற பொருளாக உணர்ந்து அதை எதிர்த்துப் போராடத் தொடங்குகிறது.

தடுப்பூசி இரண்டு அளவுகளில் கொடுக்கப்படுகிறது. முதல் டோஸ் வழங்கிய மூன்று வாரங்களுக்குப் பின்னர் இரண்டாவது டோஸ் வழங்கப்படும். அதைப் பெற்ற 90 சதவீத மக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றின் அறிகுறிகளை உருவாக்கவில்லை என்று சுட்டிக்காட்டப்படுகிறது.

எப்படியிருப்பினும் இதுவரையில் RNA தடுப்பூசிகளை மனித பயன்பாட்டிற்காக பயன்படுத்த அனுமதி வழங்கப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments