Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இலங்கையில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு வருகிறது புதிய நடைமுறைகள்...!!

 


இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக எதிர்வரும் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக சுகாதார அமைச்சின் விசேட செயலணி மீள்பரிசீலனைக் குழு கூட்டம் நேற்று (11) இடம்பெற்றது.


சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கூட்டத்தின் போது, ​​கொரோனா தொற்றாளர்களை அவர்களின் மருத்துவ நிலைமைகளுக்கு ஏற்ப தனி மருத்துவமனைகளுக்கு அனுப்பவும், மாவட்ட மற்றும் பிராந்திய மட்டங்களில் புதிய மருத்துவமனைகளை அடையாளம் காணவும், அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளை வழங்கவும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.

கொரோனா தொற்றாளர்களுக்கு பராமரிப்பு சேவைகளை வழங்கும் அதேநேரம், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மற்ற நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ சேவையைப் வழங்குது குறித்தும், நோயாளிகள் மற்றும் சுகாதார ஊழியர்களின் பிரச்சினைகளை அடையாளம் காண்பது மற்றும் அவர்களின் மனநிலையை மேம்படுத்துவதற்கான திட்டத்தை உருவாக்குவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments