இலங்கையில் சில பகுதிகளில் இன்றைய தினம் 100 மில்லமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணணக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, மத்திய, வட மத்திய, ஊவா, வட மேல் மற்றும் சப்ரகமுவ மாகாகணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என எதிர்வுகூரப்பட்டுள்ளது.
இதேவேளை, கிழக்கு மாகாணத்திலும், முல்லைதீவு மாவட்டத்தின் கரையோர பகுதிகளிலும் காலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பத்தில், காற்றின் வேகமானது, தற்காலிகமாக அதிரித்துக் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மின்னல் தாக்கங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது
0 comments: