Advertisement

Responsive Advertisement

கொழும்பில் யாசகத்தில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் வெளிவரும் அதிர்ச்சிகர தகவல்

 


கொழும்பு நகரில் சமிக்ஞை விளக்குகளுக்கு அருகாமையில் காணப்படுகின்ற சகல யாசகர்களும் உண்மையாகவே யாசகர்கள் அல்ல. இவர்களில் பெரும்பாலானவர்கள் முகாமையாளர் ஒருவரின் கீழ் இத்தொழிலில் ஈடுபடுகின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான சட்டத்தரணி அஜித் ரோகன தெரிவித்துள்ளதாவது

சமிக்ஞை விளக்குகளுக்கு அருகில் கையேந்தும் யாசகர்கள் காரணமாக கொவிட் பரவும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

வாகனங்களை செலுத்தும் போது இது குறித்து கருத்திற் கொள்ளுமாறு அவர் சாரதிகளை கேட்டுள்ளார்.

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதியிலுள்ள சமிக்ஞை விளக்குகளுக்கு அருகாமையிலுள்ள யாசகர்களினால் பல்வேறு பிரச்சினைகள் தோன்றியுள்ளன. ஒரு புறம் இவர்களது செயற்பாடுகள் கொரோனா பரவலுக்கும் காரணமாகியுள்ளன. இதனால் இவர்கள் குறித்து விசேட வேலைத்திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments