Home » , » நாடாளுமன்றம் வருகிறார் பஸில்; அமைச்சுப் பதவியொன்று வழங்கப்படவுள்ளது ?

நாடாளுமன்றம் வருகிறார் பஸில்; அமைச்சுப் பதவியொன்று வழங்கப்படவுள்ளது ?

 


அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலம் நடைமுறைக்குவந்த வந்துள்ள நிலையில், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்ச நாடாளுமன்றம் வரவுள்ளார் எனவும், அவருக்கு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சுப் பதவியொன்று வழங்கப்படவுள்ளது எனவும் தெரியவருகின்றது.


பஸில் ராஜபக்ச நாடாளுமன்றம் வருவதற்காக மொட்டு கட்சியின் தேசியப்பட்டியல் உறுப்பினர் ஜயந்த கெட்டகொட எம்.பி. பதவியை துறக்கவுள்ளார் என சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நாளை அல்லது எதிர்வரும் 12 ஆம் திகதி பஸில் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் இரட்டை பிரஜாவுரிமைகொண்ட நபரொருவர் தேர்தலில் போட்டியிடமுடியாது.

இந்நிலையில் இரட்டை குடியுரிமை கொண்டவர்களுக்கான தடை ’20’ ஊடாக நீக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையிலேயே பஸில் ராஜபக்ச நாடாளுமன்றம் வருகிறார் எனவும், அவருக்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சு பதவி வழங்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |