நேற்று முன்தினம்(2020.11.15) வெளியாகிய புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின்படி மட்டக்களப்பு மாவட்டத்தில் புனித மிக்கேல் கல்லூரி மாணவர்கள் 74 பேர் சித்தியடைந்துள்ளதாக பாடசாலையின் அதிபர் தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில், குறித்த பாடசாலையில் 158 மாணவர்கள் பரீட்சையில் தோற்றி 74 பேர் மட்டக்களப்பு மாவட்ட வெட்டுப் புள்ளியாகிய 160க்கு மேல் பெற்றுள்ளதுடன், சித்தி புள்ளியாகிய 70 புள்ளிக்கு மேல் 155 மாணவர்கள் பெற்றுள்ளதுடன் 100 புள்ளிகளுக்கு மேல் 151 மாணவர்கள் பெற்றுள்ளார்கள் எனவும் அதிபர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, மாவட்டத்தில் 194 புள்ளிகளை ஒரு மாணவர் பெற்றுள்ளதுடன் 193 புள்ளிகளை இரு மாணவர்கள் பெற்றுள்ளார்கள் எனவும் இவர்கள் உயர் புள்ளிகளை பெற உதவிய ஆசிரியர்களுக்கும், வலய கல்வி பணிமனை அதிகாரிகளுக்கும் மாணவர்களை ஊக்குவித்த பெற்றோருக்கும் நன்றிகளை அதிபர் மேலும் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
0 Comments