ரீ.எல்.ஜவ்பர்கான்)மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவில் 2320 மில்லி கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறி தெரிவித்தார்.
காத்தான்குடி ஆறாம் குறிச்சி பிரதேசத்தில் குறித்த கேரளா கஞ்சாவைக் கடத்தி வந்த நிலையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நுவன் மெண்டிசின் பணிப்புரையின் பேரில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வழிகாட்டலில் விசேட குற்றிப் புலானாய்வு பொறுப்பதிகாரி கயான் ராஜகருணா தலைமையிலான பொலிஸ் குழுவினரே இவர்களைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதுடன் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
0 comments: