ஹொரணை ஆதார வைத்தியசாலையில் பணியாற்றும் தாதியர்கள் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து அவ்வைத்தியசாலையின் 5ஆம் மற்றும் 9ஆம் விடுதிகளை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கம்பஹாவிலுள்ள ஆடைத்தொழிற்சாலையில் பணிப்புரிந்த பெண்ணொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று அண்மையில் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து, அவருடன் பணிப்புரிந்த, நெருங்கியவர்கள் என சிலருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
தற்போது, நாட்டில் வெவ்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். இந்நிலையிலேயே தற்போது தாதியர்கள்இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 4488 ஆக அதிகரித்துள்ளது. இலங்கையில் இதுவரை 13பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments: