Home » » தலை தூக்கும் மட்டு தளவாய் மீனவர் பிரச்சினை

தலை தூக்கும் மட்டு தளவாய் மீனவர் பிரச்சினை

 


மட்டக்களப்பு தளவாய் கடற்கரைப் பகுதியில் 40-50 வாருடங்களாக வாடி அமைத்து பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த மீனவர்களை அகற்றும் பணியின் முதற்படியானது  அரங்கேற்றம்.

மேற்படி விடயம் தொடர்பாக தெரியவருவது யாதெனில் தளவாய் பகுதியில் அருண எனும் சகோதர இனத்தவர் ஒரு கடை ஒன்றை அமைத்து வியாபாரம் செய்து வருகிறார். அந்த பகுதியில் 48 மீன்பிடி வாடி சொந்தக்காரர்களும் அந்த கடையிலேயே பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டிய தேவை உள்ளது. ஒவ்வொரு வாடிக்கும் குறைந்தது 15 தொடக்கம் 20 மீன்பிடி படகுகள் உள்ளன.

ஆக 700-900 படகுக்காரர்களும் மின் குமிழ்கள் ஐஸ் கட்டிகள் போன்றவாற்றை அந்த கடையிலேயே கொள்வனவு செய்ய வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு அந்த மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். அந்த கடை உரிமையாளர் இரவு வேளையில் கடையை மூடி விடுவதால் மீனுக்கு ஐஸ்கட்டிகளை பெற முடியாததால் தாங்கள் ஒரு கடையை போட எத்தனித்த போது அவர் அதற்கு முட்டுக்கட்டையாக இருந்து உள்ளார். இவ்விடயத்தை அவர் உரிய இடங்களுக்கு தெரியப்படுத்தி அந்த பகுதியில் இருந்த வாடிகளை பாதுகாப்பதற்காக போடப்பட்டிருந்த வேலியை அகற்றும்படி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தான் ஜனாதிபதியுடனும் பிரதமருடன் ஒரு நாளைக்கு இரண்டு மூன்று தடவைகள் தொலைபேசி ஊடாக கதைப்பதாகவும் கூறி அச்சுறுத்தி உள்ளார்.


அதைத் தொடர்ந்து அந்தப் பகுதியிலுள்ள விகாராதிபதியைச் சந்தித்து அவருடன் கலந்து ஆலோசித்த போது அவர் அங்குள்ள மக்கள் ஒற்றுமையாக வாழ்வதாக தெரிவித்தார்! ஆனால் அங்கு 2020.10.17 திபுலாகலையைச்  சேர்ந்த பௌத்த மதகுரு ஒருவர் அங்கு வருகை தந்ததாகவும் அவர் அங்கு பரம்பரை பரம்பரையாக வாடி அமைத்து தொழில் செய்து வருபவர்களை அங்கிருந்து அகன்று செல்லுமாறு கூறியதாகவும் அறிய முடிகிறது.

இவ்விடயம் எனது கவனத்துக்கு கொண்டுவரப்பட்ட அதே வேளை அத்துடன் இதற்கான உரிய நடவடிக்கை எடுப்பதற்காக ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.


#Shanakiyan #Batticaloa #MP #TNA #ITAK #Tamil #SriLanka

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |