Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பரீட்சையில் மயக்கமுற்ற மாணவி! முல்லைத்தீவில் சம்பவம்

 


முல்லைத்தீவு - துணுக்காய் கல்வி வலயத்தின் பாலிநகர் பகுதியில் க.பொ.த உயர்தர பரீட்சையில் தோற்றும் மாணவியொருவர் தனது பரீட்சை அனுமதி அட்டையை வழிபாட்டிற்காக சுவாமித் தட்டில் வைத்து வழிபடும் போது அனுமதி அட்டை தீ பிடித்து எரிந்துள்ளது.

இச்சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.

இதனால் மாணவி நேற்றுமுன்தினம் ஆரம்பமான க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு அச்சத்துடன் சென்றபோதும் உடனடியாகவே பாடசாலை நிர்வாகம் மற்றும் பரீட்சை மேற்பார்வையாளர்களின் துரித செயற்பாட்டின் மூலம் மாணவியின் சுட்டிலக்கம் ஆள் அடையாளங்கள் என்பன உறுதி செய்யப்பட்டு பரீட்சை எழுதுவதற்கு அனுமதிக்கப்பட்டது.

மாற்று ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு பரீட்சை எழுத அனுமதிக்கப்பட்டபோதும் இது தொடர்பில் ஆழ்ந்த சிந்தனையில் இருந்த மாணவி மயக்கமுற்று வீழ்ந்தமையினால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments