கொரோனா பரிசோதனைகளை நடத்தும் பிசிஆர் இயந்திரம் பழுதடைந்துள்ளமையினால் பரிசோதனை முடிவுகளை வெளியிடுவதில் சிக்கல் நிலை உருவாகியுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது பேசிய அவர்,
பிசிஆர் பரிசோதனைகள் நடத்தப்படும் இயந்திரம் செயலிழந்துள்ளதால் பரிசோதனை முடிவுகளை விரைவாக வெளியிட முடியாத நிலை உருவாகியிருக்கிறது. கடந்த 8 ஆம் திகதி முதல் இவ்வாறான தாமதம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 23 ஆம் திகதி முதல் குறிப்பிடதக்க தாமதம் உள்ளது. அத்துடன் நாட்டில் மொத்தமாக 1817 சுகாதார பரிசோதகர்களே உள்ளனர். இதனால் நாம் பல பிரச்சினைகளை சந்தித்து வருகின்றோம்.
இதற்கு தீர்வு காண விரைவாக இரண்டு குழுக்களை பணியில் ஈடுப்படுத்த வேண்டியது கட்டாய நிலை ஏற்பட்டிருக்கிறது. அதிகாரிகள் இது தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இதேவேளை, இது தொடர்பில் இராணுவப் பேச்சாளர் லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா கருத்து வெளியிடுகையில், இயந்திரத்தை பழுது பார்க்க சீனாவில் இருந்து ஒருவரை அழைக்க வேண்டும் என்றும் அவரை நாளைய தினத்திற்குள் அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
0 comments: