Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மீண்டும் அதிகரித்த கொரோ அச்சுறுத்தல்; குடிவரவு குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

 


கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கையாக குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் பிரதான மற்றும் பிராந்திய அலுவலகங்களுக்கு வருகை தருவதற்கு பொதுமக்களுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஒக்டோபர் மாதம் 07, 08, 09 ஆம் திகதிகளில் பொது மக்கள் சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக வருகை தருவது தற்காலிகமாக இடைநிறுத்தப்படுகின்றது என திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்திடமிருந்து சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக, அலுவலக நேரமான காலை 8.00 மணி தொடக்கம் பி.ப. 4.30 மணி வரை திணைக்களத்தின் தொலைபேசி இலக்கங்களூடாக அல்லது மின்னஞ்சல் ஊடாக உரிய பிரிவுடன் தொடர்பு கொண்டு, உரிய ஏற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

Post a Comment

0 Comments