இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ தகவல்களை வழங்குவதற்காக அரசாங்க தகவல் திணைக்களத்தினால் சிங்கள மொழியில் குறுந்தகவல் சேவையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தின் முழுமையான கண்காணிப்பின் கீழ் இந்த சேவை முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஆங்கில மொழி மூலமான குறுந்தகவல் சேவை ஏற்கனவே செயற்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்த நிலையிலேயே, இன்று முதல் சிங்கள மொழியிலும் குறுந்தகவல் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த சேவையை செயற்படுத்துவதற்கு REG இடைவெளி DGI SINHALA என்று குறிப்பிட்டு 77 001 என்ற இலக்கத்திற்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
0 Comments