நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படமாட்டாது என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
எனினும் கம்பஹா மாவட்டத்தில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு தொடர்ந்தும் நீடிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் மருந்தகங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டிருக்கும்.
அதன்படி குறித்த வர்த்தக நிலையங்களை இன்று காலை 8.00 மணிமுதல் இரவு 10.00 மணிவரை திறந்து வைக்க முடியும் என இராணுவத்தளபதி அறிவித்துள்ளார்.
0 Comments