ஏறாவூர் நிருபர்)சாய்ந்தமருது- மாளிகைக்காடு பிரதேசத்தில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள கடலரிப்பைக் கட்டுப்படுத்த துரித நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கரையோர பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதையடுத்து கரையோர பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் அப்பிரதேசத்திற்கு விஜயம் செய்து மதிப்பீடு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
சிறி லங்கா பொது ஜன பெரமுன கட்சியின் அம்பாறை மாவட்ட செயற்பாட்டாளர் றிஸ்லி முஸ்தபா பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை நேரடியாகச் சந்தித்து விடுத்த கோரிக்கையினையடுத்து தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.
மாளிக்கைக்காடு பிரதேசத்தில் கடலரிப்பு ஏற்பட்டுள்ளதனால் இங்குள்ள சுமார் அறுபது வருடங்கள் பழைமை வாய்ந்த அந்நூர் ஜும்ஆ பள்ளிவாயலின் முஸ்லிம் மயான சுற்றுமதிலின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளதுடன் மீனவர்களது படகு தரிப்பிடமும் பாதிக்கப்படுவதாக பிரதமரிடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
0 comments: