ஆட்பதிவுத் திணைக்களத்தின் கொழும்பிலுள்ள தலைமை அலுவலகம் மற்றும் மாகாண அலுவலகங்களின் அனைத்து சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒக்டோபர் 12 முதல் 16 வரை சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொவிட்-19 தொற்று நோயை கருத்திற் கொண்டு, அதிகளவான பொது மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் ஜெனரல் வியானி குணதிலக குறிப்பிட்டார்.
0 comments: