குற்றப் புலனாய்வுப் பிரிவினர் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிடம் விசாரணை நடத்த அவரது இல்லத்திற்கு தற்போது விரைந்துள்ளனர்.
தலைமறைவாகியுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கும், எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையே தொலைபேசி கலந்துரையாடல் இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. இதற்கமைய மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவு தற்போது சஜித் பிரேமதாஸவின் கொழும்பிலுள்ள இல்லத்திற்கு விரைந்துள்ளதாக அறியமுடிகின்றது.
இதேவேளை முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனை கைது செய்யும்படி சட்டமா அதிபர் திணைக்களம் குற்றப் புலனாய்வுப் பிரிவை பணித்து இன்றுடன் மூன்று நாட்களாகின்றன. எனினும் இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
0 comments: