கல்வி அமைச்சின் அழைப்பின் பேரில் இன்றைய தினம் (2020.10.16)எமது சங்கமானது அதிபர் ஆசிரியர்களின் வேதனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக கலந்துரையாடலில் பங்கேற்றது.
அங்கு நீண்டகாலம் தொடரும் வேதன ஒழுங்கீனம் சம்பந்தமாக அவ்வப்போது எடுக்கப் பட்ட நடவடிக்கைகளும் 2019 ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி எடுக்கப் பட்ட அமைச்சர் குழுவின் தீர்மானமும் ஆராயப்பட்டது.ஆசிரியர்கள் அதிபர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பாக 2019 ஒக்டோபர் 15 அன்று எடுக்கப்பட்ட அமைச்சர் குழுவின் முடிவும் அது அதிகார பூர்வமாக ஏற்றுக் கொள்ளப் பட்டமையும் எமது சங்கத்தினால் எடுத்துக் காட்டப் பட்டது.
வேதன ஆணைக்குழுவின் தீர்மானம் எதுவாயினும் சம்பளப் பிரச்சினையைச் சரிசெய்வதன் தேவைப்பாடு குறித்து எம்மால் வலியுறுத்தப்பட்பது.அதற்கமைவாக அடுத்த பாதீட்டுக்காக தற்போது அமைச்சு ஒழுங்கமைத்துள்ள வேதனப் பிரமாணப் படிமுறையின்படி பாதீட்டில் யோசனைகள் முன்மொழியப் படுமென்றும் அதற்காக இந்தக் கலந்துரையாடலின் அறிக்கையினை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அவர்களின் கரங்களுக்குக் கிடைக்க நடவடிக்கை எடுக்கப் படுமெனவும் கல்வி இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்கள் கூறினார்.
இறுதியாக அடுத்த பாதீட்டில் ஏற்றுக் கொள்ளமுடியாத பதில் கிடைக்கப் பெற்றுமானால் எமது சங்கங்களினால் பணிப் புறக்கணிப்புக்களை நிகழ்த்தவேண்டிய நிலை ஏற்படும் என்ற அறிவிப்போடு கலந்துரையாடல் நிறைவுற்றது. என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் உப தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள் தெரிவித்தார்
0 Comments