இலங்கையில் கொரோனா வைரஸ் இதேவேகத்தில் பரவினால் நாட்டில் மேலும் பல உயிரிழப்புகள் ஏற்படலாம் என தொற்று நோயியல் பிரிவின் தலைமை அதிகாரி சுடத் சமரவீர தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தாவிட்டால், அடுத்த சில நாட்களில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த முடியாததாக மாறலாம் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பொதுமக்கள் நடமாட்டத்திற்கு கட்டுப்பாடு விதிக்கப்படவில்லை, தெரிவு செய்யப்பட்ட பகுதிகளிலேயே ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள அவர், மக்கள் தொடர்ந்தும் ஏனையவர்களுடன் அதிகளவில் தொடர்புகொள்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.
மரணச்சடங்குகள், திருமணங்கள், மத நிகழ்வுகள் மூலம் கொரோனா ரைவஸ் பரவியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
0 comments: