Advertisement

Responsive Advertisement

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை கைது செய்ய சட்டமா அதிபர் உத்தரவு...!!

 


நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை கைது செய்ய நீதிமன்றத்திடம் இருந்து பிடியானை பெற்றுக்கொள்ளுமாறு பதில் பொலிஸ் மா அதிபருக்கு சட்டமா அதிபர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


பொதுநிதியை முறைகேடு செய்தமை மற்றும் தேர்தல் விதிமுறைகள் சட்டங்களை மீறியமை தொடர்பிலேயே அவரை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

இலங்கைப் போக்குவரத்து சபைக்கு சொந்தமான 222 பேருந்துகளைப் பயன்படுத்தி, ரிஷாட் பதியுதீன் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க புத்தளத்திலிருந்த தனது ஆதரவாளர்களை மன்னாருக்கு அழைத்துச் சென்றமை சி.ஐ.டி.யின் விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டது.

அந்த நேரத்தில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சராக இருந்த ரிஷாட் பதியூதீன், 9.5 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான அமைச்சின் பணத்தை செலவிட்டதாகவும் கூறப்படும் சம்பவம் தொடர்பாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments