Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பில் கொரோனா வைரசிடமிருந்து பாதுகாப்பாக இருப்போம் எனும் தொனிப்பொருளின் கீழ் செஞ்சிலுவைச் சங்கத்தினால் விழிப்புணர்வு!!



ஏ.எச்.ஏ. ஹுஸைன்
கொரோனா வைரசிடமிருந்து பாதுகாப்பாக இருப்போம் எனும் தொனிப்பொருளின் கீழ் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக்கிளை மாவட்டம் பூராகவும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

அந்த வகையில் வியாழக்கிழமை(08) மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள மத்திய போரூந்து தரிப்பிடம், பொதுச்சந்தை, வைத்தியசாலை அமைந்துள்ள பகுதி, வர்த்தக நிலையங்கள், வியாபாரிகள், பிரயாணிகள், ஏனைய பொதுமக்கள், உள்ளடங்கலாக அனைவருக்கும் துண்டுப்பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டன.

முடிந்தளவு வீட்டில் தங்கியிருங்கள், உங்களது கைகளை சவர்க்காரம் கொண்டு அடிக்கடி கழுவிக்கொள்ளுங்கள், தொடுகையற்ற வரவேற்பு வாழ்த்து முறைகளை பழகிக் கொள்ளுங்கள், குறைந்தபட்சம் ஒரு மீற்றர் இடைவெளியைப் பேணுங்கள், முகக் கவசத்தை சரியான முறையில் அணிந்து கொள்ளுங்கள், உங்களது மகம், மூக்கு வாய், என்பவற்றைத் தொடுவதைத் தவிர்க்கவும், இருமும்போதும், தும்மும்போதும், உங்களது முழங்கையினை மடித்து முகத்தை மூடுங்கள், உள்ளிட்ட பல வாசஙகங்கள் அதில் அடங்கியுள்ளன.

கொரோனா வைரசிடமிருந்து பாதுகாப்பாக மக்களை அறிவுறுத்தும், தமது விழிப்புணர்வுச் செயற்பாடுகள் மாவட்டம் பூராகவும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையின் தலைவர் தம்பிப்போடி வசந்தராசா இதன்போது தெரிவித்தார்.

Post a Comment

0 Comments