Advertisement

Responsive Advertisement

வவுனியா A9 வீதியில் இடம்பெற்ற விபத்து- ஐவர் படுகாயம்!!

 


வவுனியா ஏ9 வீதி, சாந்தசோலை சந்திப்பகுதியில் இன்று (திங்கட்கிழமை) மாலை இடம்பெற்ற விபத்தில், இரண்டு பெண்கள் உட்பட 5பேர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வவுனியா நகர்ப்பகுதியில் இருந்து ஏ9 வீதியூடாக சாந்தசோலை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள், சாந்தசோலை சந்தியால் திரும்ப முற்பட்டபோது அதே திசையில் வேகமாக பின்னால் வந்துகொண்டிருந்த மிதிவெடி நிறுவனத்திற்கு சொந்தமான கெப்ரக வாகனம் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது கெப்ரக வாகனம், அருகில் இருந்த பள்ளத்திற்க்குள் விழுந்த நிலையில், பாரிய அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் மற்றும் கெப்ரக வாகனத்தில் பயணம் செய்த நான்குபேர் உட்பட 5பேர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பாக வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Post a Comment

0 Comments