Advertisement

Responsive Advertisement

இலங்கையின் கொரோனா மரணம் 19ஆக அதிகரிப்பு - சுகாதார அமைச்சு தகவல்

 


கொரோனா தொற்றுக் காரணமாக இலங்கையில் மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி,இலங்கையின் கொரோனா மரணம் 19 ஆக அதிகரித்துள்ளது.

ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 19 வயது மற்றும் 75 வயதுடைய நபர்களே சற்றுமுன் உயிரிழந்துள்ளனர்.

இன்றையதினம் மாத்திரம் மூவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

முதலாம் இணைப்பு

இலங்கையில் 17ஆவது கொரோனா மரணம் சற்றுமுன் பதிவாகியுள்ளதென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று உறுதியான நிலையில், கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 42 வயது ஆண் ஒருவரே இன்றையதினம் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் ஜா - எல பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு வாரத்திற்குள் பதிவான 4ஆவது மரணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments