பாதாள உலக கோஷ்டியை கட்டுப்படுத்த முடியாதுவிடின் ஸ்ரீலங்கா சோமாலியாவாக மாறுமென பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
இவர் எழுதிய கோட்டாபய எனும் நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு மற்றும் பாதாள கோஷ்டி ஆகிய நூல்களை இன்று வௌியிட்டு வைக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன் போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
5 வருடங்களில் 7 புத்தகங்களை எழுதக் கிடைத்தமை தொடர்பில் நான் மகிழ்ச்சியடைகின்றேன்.
எமது நாட்டிற்கு பாரிய பிரச்சினையாகவுள்ள பாதாள கோஷ்டி மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனையின்படி பாரிய முயற்சிகளை மேற்கொள்கிறோம்.
எமது நாட்டின் எதிர்கால சமூகத்தை இதில் இருந்து பாதுகாக்க வேண்டும்.
இதே நிலைமை தொடருமானால் எமது நாடு 5 அல்லது 10 வருடங்களில் சோமாலியாவை விட மோசமான நிலமைக்கு மாறும் என அவர் எச்சரித்துள்ளார்.
குறித்த நூல்கள் முதலில் தேரர்களிடம் கையளிக்கப்பட்டதுடன், பின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடமும் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments: