Home » » மட்டக்களப்பு- வேத்துச்சேனையில் காட்டு யானைகள் அட்டகாசம் மக்கள் அவதி!!

மட்டக்களப்பு- வேத்துச்சேனையில் காட்டு யானைகள் அட்டகாசம் மக்கள் அவதி!!




 ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டம் படுவாங்கரைப் பிரதேசத்தின் போரதீவுப் பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வேத்துச்சேனைக் கிராமத்திற்குள் ஞாயிற்றுக்கிழமை (06) அதிகாலை ஒரு மணியளவில் புகுந்த காட்டுயானைகளால் அக்கிராம மக்க்ள மிகுந்த சிரமத்திற்குட்பட்டதாக தெரிவிக்கின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை (06) அதிகாலை வேத்துச்சேனைக்கிராமத்திற்குள் புகுந்த காட்டுயானைக் கூட்டத்தினால் அக்கிராம மக்கள் மிகுந்த சிரமங்களுக்குட்பட்டு, அல்லோலகல்லோலப்பட்டுள்ளனர். கிராமத்திற்குள் புகுந்த காட்டுயானைகள் வீடுகளை அடித்து உடைத்துள்ளதுடன், வீடுகளில் மக்கள் தமது உணவுக்காக வைத்திருந்த நெல் மூட்டைகளையும் உண்டு சேதப்படுத்தி, மற்றும், வேலிகள், மற்றும் நெல்குற்றும் ஆலை ஒன்றையும் முற்றாக அடித்து உடைத்துவிட்டுச் சென்றுள்ளன.

ஆழ்ந்த உறக்கத்திலிருந்த எமக்கு அதிகாலை ஒரு மணியளவில் வெளியில் ஏதோ சத்தம் கேட்டது நான் மாத்திரம் வெளியில் வந்து பார்த்தேன் மிகவும் உயரமான யானை ஒன்று எமது வீட்டை நோக்கி வருவதை அவதானித்தேன் பின்னர் நான் உறக்கத்;திலிருந்த மனைவி பிள்ளைகளை எழுப்பிக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி வீதிக்கு வந்துவிட்டோம். பின்னர் இன்னுமொரு யானை வந்து. இரண்டு யானைகளுமாக எமது வீட்டின் முன் சுவர் பகுதியை உடைத்து உள்ளிருந்த நெல் மூட்டைகளையும் இழுத்து நிலத்திலே கொட்டி உண்டு விட்டு சேதப்படுத்திவிட்டுச் சென்றுள்ளன. என கிராமவாசி ஒருவர் தெரிவிக்கின்றார்.

இந்நிலையில் காட்டுயானையின் தாக்கத்தினால் 3 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், நெல்குற்றும் ஆலை ஒன்றும் முற்றாக சேதடைந்துள்ளன. இது இவ்வாறு இருக்க வேத்துச்சேனைக்கிராடத்திலிருந்து மரவன்னி தோட்டம், மற்று மக்களின் பயன்தரம் வாழை உள்ளிட்ட பயிரினங்களையுமு; அழித்துவிட்டுள் சென்றுள்ளன.

இந்நிலையில் வனஜீவராசிகள் பாதுகாப்பு பிரிவினருக்கு அறிவித்துள்ள போதிலும் நாங்கள் கிராமத்தில் நிலை கொண்டிருந்த காட்டுயானைகளை ஒருவாறு வெளியேற்றிய பின்னர்தான் அவர்கள் வந்தார்கள், எம்மிடம் யானை வெடிகள்கூட இல்லை கிராம சேவகர் வந்து பார்வையிட்டுச் சென்றுள்ளார். என வேத்துச்சேனைக் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவலர் எஸ்.கமலேஸ்வரன் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரைப் பிரதேசத்தில் மிக நீணட்ட காலமாக விருந்து தொடர்கiதாயாக இந்த காட்டுயானைகளளின் தொல்லைகளும். அட்டகாசங்களும் அதிகரித்து வருகின்றதோடு இதனாலா பல அப்பாவி உயிர்களும் காவு கொள்ளப்படு வருவதோடு, சொத்துக்களும் சேதமாக்கப்பட்டு வருகின்னமை எடுத்துக்காட்டாகும்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |