Advertisement

Responsive Advertisement

மஞ்சள் கடத்தல்; இரு சுங்க திணைக்கள அதிகாரிகள் கைது!

 


33000 கிலோ கிராம் மஞ்சள் கடத்த முற்பட்ட சம்பவம் தொடர்பில் இரு சுங்க திணைக்கள அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


நேற்றைய தினம் சட்ட விரோதமான முறையில் கொள்கலன்களில் கடத்தப்பட்ட 33000 கிலோகிராம் மஞ்சள் மற்றும் உழுந்துடன் 10 பேர் கைது செய்யப்பட்டனர். சுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே புளுமென்டல் பகுதியில் வைத்து குறித்த 10 பேரும் கைது செய்யப்பட்டனர்.

அத்தோடு 7 பாரவூர்திகளும் புளுமென்டால் பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டது. சட்டவிரோத மஞ்சள் மற்றும் ஏனைய பொருட்கள் டுபாயில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் மட்டக்குளி பிரதேசத்தின் வர்த்தகர் ஒருவரால் குறித்த பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே சம்பவம் தொடர்பில் இரு சுங்க திணைக்கள அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments