Advertisement

Responsive Advertisement

மஹிந்த ராஜபக்ஸ இன்று புதிய பிரதமராக பதவியேற்கிறார்

 

நாட்டின் 28 ஆவது பிரதமராக மஹிந்த ராஜபக்ஸ இன்று (09) பதவியேற்கவுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் மஹிந்த ராஜபக்ஸ பதவியேற்கவுள்ளார்.

 பதவியேற்பு நிகழ்வு களனி ரஜமஹா விகாரையில் இன்று காலை 8.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இந் நிகழ்வில் மகா சங்கத்தினர் உள்ளிட்ட மத குருமார்கள் மற்றும் வௌிநாட்டு இராஜதந்திரிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இம் முறை பொதுத் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் களமிறங்கி வெற்றி பெற்ற உறுப்பினர்களும் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடந்த 5ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸ 5,27,364 விருப்பு வாக்குகளை பெற்றிருந்தார்.இலங்கை வரலாற்றில் வேட்பாளர் ஒருவர் பெற்றுக் கொண்ட அதிக விருப்பு வாக்குகளாக இது பதிவாகியுள்ளது.

Post a Comment

0 Comments