Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

க.பொ.த சா/த மாணவர்கள் அடையாள அட்டைக்கு 31 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்கவும்

 

 கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பங்களை  சமர்ப்பிக்குமாறு ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாடசாலை அதிபர்கள் ஊடாக குறித்த விண்ணப்பப்படிவங்களை முழுமையாக பூர்த்திசெய்து விரைவில் சமர்ப்பிக்குமாறு ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க 
குறிப்பிட்டுள்ளார்.

க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் தமது விண்ணப்பப்படிவங்களை இதுவரை கையளிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

15 வயதை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் உள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Post a Comment

0 Comments