புதிய அரசாங்கத்தின் புதிய இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்கும் நிகழ்வு சற்று முன்னர் ஆரம்பமானது.
கண்டி, மகுல்மடுவவில் இந்நிகழ்வு தற்போது இடம்பெற்று வருகின்றது.
புதிய இராஜாங்க அமைச்சர்களின் விபரம்,
1.சமல் ராஜபக்ஷ – உள்ளக பாதுகாப்பு உள்நாட்டு அலுவல்கள் மற்றும் அனர்த்தமுகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்.
2.பியங்கர ஜெயரத்ன – வெளிநாட்டு தொழில்வாய்ப்பு, மேம்பாடு சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்.
3.துமிந்த திசாநாயக்க – சூரிய சக்தி, காற்று நீர்மின் உத்பத்தி கருத்திட்ட இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்.
4.தயாசிறி ஜயசேகர – கைத்தறி துணிகள் உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்.
5.லசந்த அழகியவண்ண – கூட்டுறவு சேவைகள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்.
6.சுதர்ஷினி பெர்னான்டோபிள்ளை – சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்.
7.நிமல் லங்சா – கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்.
8.ஜயந்த சமரவீர – கிடங்கு வசதிகள், கொள்கலன் முனையங்கள், துறைமுக விநியோக வசதிகள் மற்றும் கப்பல் தொழில் தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்.
9.கனக ஹேரத் – கம்பனி தோட்டங்களை சீர்திருத்தல், தேயிலை தொழிற்சாலை அபிவிருத்தி மற்றும் மேப்பாட்டு இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்
10.விதுர விக்கிரமநாயக்க – தேசிய பாரம்பரிய, கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்.
11.ஜனகா வக்கும்பர – சிறுபெருந்தோட்ட அபிவிருத்தி மற்றும் அதன் சார்ந்த கைத்தொழில் ஏற்றுமதி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்.
12.விஜித்த வேறுகொட – அறநெறிப பாடசாலைகள், பிக்குமார்கள் வி, பிரிவேனாக்கள் மற்றும் பௌத்த பல்கலைக்கழகங்கள் இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்.
13.மொஹான் டி சில்வா – உர உற்பத்தி மற்றும் விநியோகங்கள், இரசாயனப் பசளைகள் மற்றும் கிருமிநாசினி பயன்பாட்டு ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்.
14.லோகன் ரத்வத்த – இரத்தினக்கல் மற்றும் தங்கஆபரணங்கள் சார்ந்த கைத்தொழில்கள் இராஜாங்க அமைச்சராக பதவியேற்றார்.
15.ஷெஹான் சேமசிங்க - சமுர்த்தி வதிவிட பொருளாதார, நுண் நிதிய, சுய தொழில் வியாபார அபிவிருத்தி மற்றும் கீழுழைப்பு பயன்பாட்டு அரசாங்க வளங்கள் அபிவிருத்தி அமைச்சராக பதவியேற்றார்.
16.ரொஷான் ரணசிங்க - காணி முகாமைத்துவ அலுவல்கள் மற்றும் அரச தொழில் முயற்சி காணிகள் மற்றும் சொத்துகள் அபிவிருத்தி அமைச்சராக பதவியேற்றார்.
0 comments: