Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

அனைத்து அரச ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் பெறுவோருக்கும் பல்வேறு சலுகைகளை வழங்க தயாராகும் அரசாங்கம்


அனைத்து அரச ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கு பல்வேறு சலுகைகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த நடைமுறையின் கீழ் அரச ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் அடங்கலாக 20 இலட்சம் பேர் நன்மை அடையவுள்ளனர்.
இந்த வேலைத்திட்டத்தின் கீழ் 15 இலட்ச அரச ஊழியர்களுக்கும் பாரிய நன்மைகள் ஏற்படவுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரச ஊழியர்களின் அனைத்து சம்பள பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளதென அமைச்சர் கூறியுள்ளார்.
அதற்கமைய அனைத்து அரச ஊழியர்களினது சம்பளம் தொடர்பான பிரச்சினைகள் தேசிய சம்பள ஆணைக்குழுவின் மூலம் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அனைத்து அரச ஊழியர்களுக்கும் நன்மைகளை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் தயாராக உள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேபோன்று ஒய்வூதியம் பெறுவோருக்கும் சலுகை வழங்கும் அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு மேலதிகமாக அரச ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் பெறுவோருக்கும் அரச வைத்தியசாலைகளில் புதிய தொகுதி ஒன்றை நிர்மாணிப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.

Post a Comment

0 Comments