Advertisement

Responsive Advertisement

பாடசாலைகள் மாணவர்கள் கொரோன தொற்றுக்குற்றாகியுள்ளனர். பொதுச் சுகாதாரப் பரிசோதர்களின் கோரிக்கையை நிறைவேற்றுங்கள்"



ராஜாங்கனை, கொட்டாவை தர்மபால, அனுராதபுர டி.எஸ். சேனாநாயக்க ஆரம்ப பாடசாலை ஆகியவற்றின் மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்தப் பின்னணியில் அரசாங்கம் பாடசாலைகளை ஆரம்பிக்கின்றது. எனினும் முதன் முறையாக பாடசாலைகள் மாணவர்கள் தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


அவர் நேற்று (26) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போது தற்போதைய நெருக்கடி தொடர்பாக உரையாற்றினார்.

இந்த காலகட்டத்தில் நாட்டில் முதல்முறையாக பாடசாலை மாணவர்கள் நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். எனினும் பாடசாலைகளை மீளத் திறக்கும் போது அவை தொடர்பாக ஆராய போதுமான ஏற்பாடுகள் இல்லை என அவர் குற்றம் சாட்டினார்.

இந்த சூழ்நிிலையில் கல்வி  அமைச்சின்  அதிகாரிகளுக்கு சுகாதார பிரச்சினைகள் குறித்து தெளிவு இல்லை. பாடசாலைகளுக்கு வந்து செயல்முறைகளை கண்காணித்த ஒரே குழு பொது சுகாதார உத்தியோகத்தர்கள் மட்டுமே. 

அவர்கள் தற்போது சில கோரிக்கைகளை முன்வைத்து பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். எனவே, அவர்களின் கோரிக்கைகளை ஏற்று அவற்றை நிறைவேற்ற அரசாங்கம் முன்வரவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். 



Post a Comment

0 Comments