பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் பிரச்சாரக் கூட்டம் இன்று சனிக்கிழமை(11) எருவில் கிராமத்தில் தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினர் காண்டீபன் தலைமையில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களான ஞா.ஸ்ரீநேசன், சீ.யோகேஸ்வரன், கி.துரைராஜசிங்கம், மா.உதயகுமார், இரா.சாணக்கியன் ஆகியோரும்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன், மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தி.சரவணபவன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் நடராஜா, ஆலய பரிபாலன சபைத் தலைவர் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
0 Comments