Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மஹிந்த தேசப்பிரிய வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!

தேர்தல் சட்டத்திற்கு முரணாக தனியார் பேருந்துகள், முச்சக்கர வண்டிகள் மற்றும் ஏனைய தனியார் வாகனங்களில் ஒட்டப்பட்டுள்ள தேர்தல் பிரசார விளம்பரங்களை உடனடியாக அகற்றமாறு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தனியார் வாகனங்களில் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கு பிரசாரம் செய்யும் வகையிலான வாசகங்கள், அடையாளங்கள், புகைப்படங்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் அல்லது பதாகைகளை காட்சிப்படுத்தப்படுவதாக தேர்தல் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
இவ்வாறு வாகனங்களில் ஸ்டிக்கர்களை ஒட்டுவது 1981 ஆண்டின் இலக்கம் - 1 நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தின் 74 ஆவது சரத்திற்கு அமைய தண்டனைக்குரிய குற்றம்.
வாகனங்களில் ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கர்களை அகற்ற அனைத்து பொலிஸ் பிரிவுகளும் உள்ளடங்கும் வகையில் அவசரமான பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு பிரதேசங்களுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், பொலிஸ் பிரிவுகளுக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் மஹிந்த தேசப்பிரிய தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments