Home » » தபால்மூல வாக்களிப்பினை நேர்த்தியாக நடாத்த மட்டக்களப்பில் அத்தாட்சிப் படுத்தும் உத்தியோகத்தர்களுக்கு விசேட பயிற்சி

தபால்மூல வாக்களிப்பினை நேர்த்தியாக நடாத்த மட்டக்களப்பில் அத்தாட்சிப் படுத்தும் உத்தியோகத்தர்களுக்கு விசேட பயிற்சி

மட்டக்களப்பு சிஹாறா லத்தீப்)
எதிர்வரும் 2020 பொதுத் தேர்தலை சுகாதார விதிமுறைகளுக்கமைய நடாத்தும் திட்டத்திற்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தபால்மூல வாக்களிப்பை நடைமுறைப் படுத்துவதற்கு தேவையான ஆயத்த நடவடிக்கைகளை தேர்தல் திணைக்களம் துரிதமாக மேற்கொண்டு வருகின்றது.

இதற்கமைய தபால்மூல வாக்களிப்பை அத்தாட்சிப்படுத்தும் உத்தியேகத்தர்களுக்குத் தேவையான அறிவூட்டல் தொடர்பான விசேட செயலமர்வு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் அரசாங்க அதிபருமான திருமதி. கலாமதி பத்மராஜா தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் ஆர். சசீலன், அம்பாறை மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் திலின விக்ரமசிங்க ஆகியோரால் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் இத்தேர்தலுக்கான புதிய சட்டவிதிமுறைகள் பற்றிய செயல் முறையிலான தெளிவான அறிவூட்டல் வழங்கப்பட்டது.

இம்மாவட்டத்தில் தபால் மூல வாக்களிப்பிற்காக மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் 7342 அரச உத்தியோகத்தர்களும், பட்டிருப்புத் தோகுதியில் 3047 அரச உத்தியோகத்தர்களும், கல்குடா தேர்தல் தொகுதியில் 2426 அரச உத்தியோகத்தர்களுமாக மொத்தம் 12815 பொலிஸ் மற்றும் முப்படையினர் அடங்களான அரச உத்தியோகத்தர்கள் இத்தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

இதற்கமைய தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரச அலுவலர்கள் தபால் மூலம் வாக்களிப்பதற்காக 14, 15 ஆந்திகதிகள் தத்தமது அரச காரியாலயங்களிலும் மற்றும் மாவட்ட செயலகங்கள், தேர்தல் அலுவலகங்கள், பொலிஸ், முப்படை சிவில் பாதுகாப்பு படை உட்பட சுகாதார துறையினர் எதிர்வரும் 16, 17 ஆந்திகதிகளில் நள்ளிரவு 12.00 மணிவரை வாக்களிக்க முடியுமெனவும், இத்தினங்களில் வாக்களிக்க முடியாதவர்கள் தாம் சேவைபுரியும் நிலையம் அமைந்தள்ள மாவட்ட செயலகங்களில் அல்லது மாவட்ட தேர்தல் காரியாலயங்களில் வாக்களிக்க முடியுமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் நடவடிக்கைகளுக்காக தபால் திணைக்களத்திற்கு எதிர்வரும் 11, 12, 13 ஆந் திகதிகளில் கையளிக்கப்படவுள்ளதுடன், வாக்காளர் அட்டைகள் வீடு வீடாக விநியோகிக்கும் பணிகள் எதிர்வரும் 29 ஆந் திகதிவரையும் இடம்பெறும் எனவும் வாக்காளர் அட்டை கிடைக்கப் பெறாதவர்கள் 29ஆந் திகதிக்குப்பின் தபால் அலுவலகங்களில் தத்தமது அடையாளத்தினை உறுதிப்படுத்தி வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக் கொள்ளமுடியுமெனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தகவல் தெரிவிக்கின்றது.0,
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |