அம்பாறை - கல்முனை கடற்பகுதியில் தற்போது அதிகளவான நெத்தலி மீன்கள் பிடிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களில் பல மாதங்களுக்குப் பின்னர் இன்று இவ்வாறான அதிகளவான மீன்கள் பிடிபட்டதாக கடற்றொழிலாளர்கள் தெரிவித்தனர்.
சுமார் 5 மாதங்களுக்குப் பின்னர் கரைவலை மீனவர்களுக்கு இவ்வாறு அதிகளவான மீன்கள் பிடிபட்டதாக அவர்கள் கூறியுள்ளனர்.
எனினும் அதற்கு உரிய விலை காணப்படுவதில்லை என கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது அதிகளவான மீன்கள் பிடிபடக்கூடிய காலமாக இல்லாதபோதும் நெத்தலி மீன்கள் அதிகமாக பிடிபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மீன்களின் விலை மிகவும் குறைவாக காணப்படுவதாக கடற்றொழிலாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
0 Comments