Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பில் சஜித் பிரேமதாசவால் திறந்து வைக்கப்பட்ட ஐ.ம.சக்தியின் காரியாலயம்

இன்றைய தினம் சனிக்கிழமை (04) காலை 11.30 மணியளவில் சென்ரல் வீதியில் புனித மிக்கேல் கல்லூரிக்கு முன்பாக உள்ள கட்டிடத்தில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட காரியாலயம் அக்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்கள் அறிமுகமும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சஜித் பிரேமதாச, மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்களான அமீர் அலி, பத்மநாதன் கேசவகுமார், ஜோன் லோகநாதன், ஜெயசந்திரிக்கா ஜெகதீஸ்வரன், எவ். மகேந்திரன், லோகநாதன் ஜெருஷன் மற்றும் கட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments