Home » » ஆசிரியர்களின் வருகை வெளியேறுகை தொடர்பான புதிய சுற்றுநிருபம் – தமிழில் இனியாவது அதிபர்கள், கல்வி அதிகாரிகள் புரிந்து கொள்வார்களா?

ஆசிரியர்களின் வருகை வெளியேறுகை தொடர்பான புதிய சுற்றுநிருபம் – தமிழில் இனியாவது அதிபர்கள், கல்வி அதிகாரிகள் புரிந்து கொள்வார்களா?

பாடசாலைகளை மீள ஆரம்பித்து நடாத்தும் போது ஏற்பட்ட நிர்வாக முரண்பாடுகள் அனைத்துக்கும் பதிலளிக்கும் வகையிலான சுற்றறிக்கை ஒன்றை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
2020.7.1 ஆம் திகதி இடப்பட்ட ED/01/12/06/05/01 இலக்கமுள்ள இச்சுற்றறிக்கை தமிழ் படுத்தித் தருகிறோம்.
கோவிட் 19 இன் பின்னர் பாடாசலைகளையும் அரச அனுமதி பெற்ற பாடசாலைகளையும் மீள ஆரம்பிப்பதற்கான செயற்றிட்டத்திற்கு சமாந்திரமாக 2020.6.10 மற்றும் 2020.06.22 ஆகிய திகதிகளில் வெளியிடப்பட்ட வழிகாட்டல்களுக்கு மேலதிகமாக இந்த தொற்றுநிலை காரணமாக பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான முதலாவது மற்றும் இரண்டாவது கட்டங்களில் ஜூலை 06 – ஜூலை 17 மற்றும் ஜூலை 20-ஜூலை 24) பாடசாலையினுள் ஆட்கள் ஒன்றுகூடுவதை தவிர்க்கும் நோக்கோடு பாடசாலைக்கு வரவழைக்கப்பட வேண்டியவர்கள்,
கற்றல் கற்பித்தல் செயற்பாட்டிற்கான நேரசூசி வழங்கப்பட்ட மற்றும் நிர்வாக, சுகாதாரம் முதலான பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ள ஆசிரியர்களேயாகும்.
அதற்காக கீழ் காணும் வழிமுறையைப் பேணவேண்டும்.
1. எந்த பொறுப்பும் ஒப்படைக்கப்படாத, கற்பித்தலுக்கான நேரசூசி இல்லாத ஆசிரியர்கள் இந்த கட்டங்களில் பாடசாலைக்கு வரவழைக்கக் கூடாது. அவ்வாறே பெறுப்பு ஒப்படைக்கப்பட்ட ஆசிரியர்கள் காலை 7.30 க்கு வருகை தரவேண்டும் என்பதோடு குறிப்பிட்ட பொறுப்புக்கள் முடிவடைந்ததன் பின்னர் பாடசாலையை விட்டுச் செல்ல சந்தர்ப்பம் வழங்கப்படல் வேண்டும்.
2. மூன்றாம் கட்டத்தில் (ஜ{லை 27 முதல்) அனைத்து ஆசிரியர்களும் காலை 7.30 க்கு பாடசாலைக்கு வருகை தர வேண்டும் என்பதோடு,பிற்பகல் 1.30 வரை பாடசாலையில் தரிக்க வேண்டும். அவ்வாறே பி.ப 3.30 வரை நேரசூசி வழங்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் அக்காலம் வரை பாடசாலையில் நிற்க வேண்டும்.
3. மூன்றாம் கட்டத்தில் (ஜ}லை 27 முதல்) கடமைக்கு சமூகளிக்கும் அனைத்து ஆசிரியர்களும் பொது 18 படிவத்தில் வழமைபோன்று வருகை வெளியேறுகை ஒப்பங்களை இடவேண்டும்.
குறித்த ஆலோசனைகளைக் நடைமுறைப்படுத்துவது அனைத்துத் தரப்பினரதும் பொறுப்பாகும்.
கல்வி அமைச்சின் செயலாளர்
என்.எச்.எம். சித்திரானந்த
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |