Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

புகையிரத நிலையத்திற்கு பூட்டு - பொறுப்பதிகாரி தனிமைப்படுத்தலுக்கு

உனவட்டுன புகையிரத நிலைய பொறுப்பதிகாரி கொரோனா தொற்றுக்கு உள்ளான ஒருவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த காரணத்தினால் தற்காலிகமாக உனவட்டுன புகையிரத நிலையம் மூடப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

பி.சீ.ஆர் பரிசோதனைகளில் அவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக உனவட்டுன பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

மேலும் தொற்று நீக்கும் நடவடிக்கைகள் உனவட்டுன புகையிரத நிலையத்தில் இடம்பெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் இருந்து ஹபராதுவ பகுதிக்கு வந்த நபரொருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதுடன் குறித்த நபருடன் புகையிரத நிலைய பொறுப்பதிகாரி நெருங்கி தொடர்பில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் குறித்த புகையிரத நிலைய பொறுப்பதிகாரி 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments