Home » » மட்டக்களப்பில் கவனயீனமாக நடந்த 44 தேர்தல் உத்தியோகத்தர்களுக்கு ஐந்து வருட தடை

மட்டக்களப்பில் கவனயீனமாக நடந்த 44 தேர்தல் உத்தியோகத்தர்களுக்கு ஐந்து வருட தடை


(மட்டக்களப்பு மொஹமட் தஸ்-ரீப்)
2020 பொது தேர்தலில் ஒருமீட்டர் இடைவெளி பேணுதல் ,முகக்கவசம் அணிதல் ,மற்றும் தொற்றுநீக்கி களால் கைகளை சுத்தம்செய்தல் போன்ற மூன்று பிரதான விடயங்கள் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படவேண்டு மென்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல் விடுத்துள்ளதாக இன்று(23 ) மாலை மட்டக்களப்பு மாவட்டசெயலகத்தில் நடைபெற்ற பொதுத்தேர்தல் ஏற்பாடு தொடர்பான விசேட கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் அரசாங்க அதிபருமான திருமதி. கலாமதி பத்மராஜா தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்த விசேடகூட்டத்தில் தேர்தல் கடமையில் சிரேஷ்ட தலைமைதாங்கும்உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது கொவிட் 19 கொரோனாதடுப்பு சுகாதார வழிமுறைகளைப் பேணிநீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடாத்த இம்முறை விசேட ஏற்பாட்டின்கீழ் நடைபெறவுள்ள தேர்தலில் சிரேஷ்ட தலைமை தாங்கும்உத்தியோகத்தர்கள்பின்பற்றவேண்டிய வழிமுறைகள் தொடர்பாக விரிவாக விளக்கப்பட்டது.

இங்கு மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் ஆர்,சசீலன், கருத்து வெளியிடுகையில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் வாக்கெடுப்பு நிலைய கடமையில் கவனயீனமாக நடந்த 44 தலைமைதாங்கும் தேர்தல்கடமை உத்தியோகத்தர்கள் ஐந்து வருடங்களுக்கு தேர்தல் கடமையில் இணைத்துக் கொள்ளாதவாறுதேர்தல் கடமைதடைசெய்யப்பட்டிருப்பதாகவும் இத்தேர்தலிலும் இந்த தவறுக்கு இடமளிக்கப்படக்கூடாதெனவும் அறிவிப்பு செய்தார்.

மேலும் மாற்று திறனாளிகள்வாக்களிக்க போக்குவரத்து வசதிசெய்ய முன் கூட்டியே வைத்திய அத்தாட்சிப்பத்திரம் சமர்பிக்குமாறு பிரதேச மட்ட தேர் தல் ஏற்பாடுஉத்தியோகத்தர்கள் கேட்டுக்கொள்ளப் பட்டனர், தேர்தலுக்கு மறுநாள் ஆறாம்திகதி இரவு மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் முடிவுகளை வெளியிடஎதிர்பார்க்கப்படுவதாகவும்அன்றையதினம்காலைஎட்டுமணிக்கேவாக்குகள்எண்ணும்பணிகள்ஆரம்பிக்கப்படும் எனவும் இங்கு தெரிவிக் கப்பட்டது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |