Advertisement

Responsive Advertisement

முகக்கவசம் அணியாத 1406 பேர் பிடிபட்டனர்

முகக்கவசங்கள் அணியாது நடமாடிக்கொண்டிருந்த 1,406 நபர்களையும், தனி மனித இடைவெளி பேணாமல் இருந்த 1,115 பேரையும் எச்சரித்து விடுவித்துள்ளதாக மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

அதேபோல, மேல் மாகாணத்தில் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் 393 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று காலை 6 மணி தொடக்கம் இன்று அதிகாலை 5 மணி வரையில் காவல்துறையினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையில் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் 166 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மேல்மாகாணத்திற்கு பொறுப்பான விசேட பிரதி காவற்துறைமா அலுவலகம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments