Home » , » மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நேற்றைய தினம் புற்றுநோயாளர் சிகிச்சை பிரிவில் ஆரம்பிக்கப்பட்ட Linear accelerator தொழில்நுட்பம் புதிய மைல் கல்!!!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நேற்றைய தினம் புற்றுநோயாளர் சிகிச்சை பிரிவில் ஆரம்பிக்கப்பட்ட Linear accelerator தொழில்நுட்பம் புதிய மைல் கல்!!!


‘‘ஐம்பது வருடங்களுக்கு முன்பு புற்று நோயைப் பற்றி ஒன்றுமே தெரியாது, குறிப்பாக, இலங்கையில்  புற்றுநோய் வந்தால் கண்டுபிடிப்பதற்கான   வசதிகளும் குறைவு. சிகிச்சைகளும் போதுமான அளவில் வரவில்லை. இதனால்தான், ‘புற்றுநோய் வந்தால் குணப்படுத்த முடியாது... இறப்பதைத்   தவிர வேறு வழியில்லை’ என்கிற பயம். இன்று மருத்துவத் தொழில்நுட்பம் பலவகையிலும் வளர்ந்திருக்கும் நிலையில், எத்தனையோ நவீன சிகிச்சைகள் வந்திருக்கின்றன. இனி அந்த பழைய நம்பிக்கைகளோ,  பயமோ வேண்டியதில்லை. மனிதர்களுக்கு எத்தனையோ நோய்கள் வருகின்றன. அவற்றைக் குணப்படுத்திவிட்டு தினசரி வாழ்க்கையைத் தொடர்கிறோம்.

அதேபோல புற்றுநோயும் ஒரு சாதாரண நோய்தான். இந்த எண்ணம் மட்டும் நம்மிடம்  ஏற்பட்டால் போதும். அந்த அளவுக்கு புற்றுநோயை முன்னரே கண்டறியும் முறைகளும் நவீன சிகிச்சைகளும் இருக்கின்றன.  கிட்டத்தட்ட 150க்கும் அதிக புற்றுநோய்கள் இருக்கின்றன. உடலில் எத்தனை பாகங்கள் இருக்கிறதோ அத்தனை வகையான புற்றுநோய்களும்   இருக்கின்றன. இலங்கையை பொறுத்தவரை வாய் மற்றும் தொண்டை புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய், மார்பகப் புற்று நோய்தான் அதிகம்   ஏற்படுகிறது. இந்த நோய்களை உருவாகும் முன்னரே கண்டுபிடிப்பதற்கான Precancer முறைகளும் இப்போது நிறைய இருக்கின்றன. நாம் முதல் கொழும்பு மஹரகமவிற்கு புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை போன்றவற்றுக்கு பெற்று வந்த எமது  மக்களுக்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நேற்றைய தினம் புற்றுநோயின் கதிரியக்க சிகிச்சையை துரிதப்படுத்த பலர் பயன்பெற
மட்டக்களப்பு வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்ட Linear accelerator தொழில்நுட்பம்   இன்று இலங்கையில் புற்றுநோய் சிகிச்சைக்காக 5 வது  வைத்தியசாலையாகவும், இலங்கையில் லீனியர் ஆக்ஸிலரேட்டரான உபகரண கதிரியக்க சிகிச்சையைப் பயன்படுத்தும் மூன்றாவது அரசு வைத்தியசாலையாகவும் மாறியது பெருமைப்பட வேண்டிய நிகழ்வாகும்.

இந்தக்  கண்டுபிடிப்பு முறையில், எக்ஸ்ரே யிலேயே 3 வகைகள் இருக்கின்றன. குறிப்பாக, கம்ப்யூட்டர் மயமான பிறகு Diganostic Gamma camera,   சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ. பெட் ஸ்கேன் போன்ற பல கண்டுபிடிப்பு முறைகள் வந்திருக்கின்றன.

முன்பு புற்றுநோய் வந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கரன்ட் வைத்தால், உடல் முழுவதும் அந்தக் கதிர்வீச்சால் பாதிப்பு ஏற்படும். புற்றுநோய் செல்களை மட்டும் அழிக்காது, பக்கத்தில் இருக்கும் ஆரோக்கியமான  செல்களும் பாதிக்கப்படும். இந்த Super voltage radiation. அடுத்தக் கட்டமாக Linear accelerator தொழில்நுட்பம் வந்தது. இப்போது எந்த இடத்தில்  புற்றுநோய் செல்கள் இருக்கிறதோ, அந்த இடத்தை மட்டும் மிக துல்லியமாகக் கணித்து கதிர்வீச்சின் மூலம் சிகிச்சை அளிக்கும் Position  radiotherapy வந்திருக்கிறது. 2-3 வைத்திய முறைகளை ஒன்றிணைத்து மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு  கீமோதெரபி வந்ததும் நமக்கு பெரிய வரப்பிரசாதமே.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |