Home » » தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் முன்நாள் அரச அதிபர் உதயகுமார் அவர்கள் குருக்கள்மடம் கிராமத்தில் ஏற்படுத்திய மக்கள் சந்திப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் முன்நாள் அரச அதிபர் உதயகுமார் அவர்கள் குருக்கள்மடம் கிராமத்தில் ஏற்படுத்திய மக்கள் சந்திப்பு

                                                                                                      (லோசிதரன்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பின் போட்டியிடுகின்ற முன்நாள்  அரச அதிபர் மட் குருக்கள்மடம் கிராம அபிவிருத்திச் சங்க கட்டிடத்தில் மக்கள் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.  இந் நிகழ்வில் குருக்கள்மடம் ஆலயங்களின் நிர்வாகத்தினர் பொது அமைப்புக்களின் உறுப்பினர்கள் விளையாட்டுக்கழகங்களின் உறுப்பினர்கள் புத்தி ஜீவிகள் பொதுமக்ககள் என இச்சந்திப்பில்  பலர் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வினை திரு.மா.திருநாவுக்கரசு அவர்கள் தலைமை தாங்கி நடத்தினார்.

திருநாவுக்கரசு அவர்கள்  உரையாற்றும் போது தமிழரசுக் கட்சியின் ஆரம்ப காலத்தத் தலைவர்களின் வரலாறுகள் பற்றியும்  தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்பாகவும் குறிப்பிட்டார் . இம்முறை அரசியலில் பொருத்தமானவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடுவதாகவும் அதில் ஒருவர் திரு.மா.உதயகுமார் எனவும் குறிப்பிட்டார். இந்நிகழ்வில் ஆலயங்களின் உறுப்பினர்கள் வரிசையில் லோகநாயகம் சா.துவாரகன் கழகங்களின் சார்பாக விஜயகுமார் அதனைத் தொடர்ந்து தமிழரசுக்கட்சியின் சார்ப்பில் போட்டியிட்ட விமலேஸ்வரன் போன்றோர் முன்னாள் அரச அதிபரின் சிறப்புப் பற்றியும் அவரின் செயற்றிறன் பற்றியும் அவரின் ஆளுமை பற்றியும்  மிகத் தெளிவாகக் குறிப்பிட்டனர்.  இன்னும் பலர் உதயகுமார் அவர்களின் பெருமைகளை விளாவாரியாக விளக்கினர்.















அதனைத் தொடர்ந்து உதயகுமார் முன்னாள் அரச அதிபர் உரையாற்றும் போது இம்முறை அரசியல் உள்வாங்கல் ஒரு விபத்து எனவும் தான் அரசியலில் விருப்பமற்றவன் எனவும் குறிப்பிட்டார்.  அத்துடன் அரசியல் ஒரு சாக்கடை எனவும் அந்தச் சாக்கடையில் பூக்கடையைத் தெடுபவனாகவும் உள்ளேன் எனவும் குறிப்பிட்டார்.  தான் இம்முறை அரசியலுக்கு வந்ததன் காரணம்  ”நீங்கள் அரசியலைத் தவிர்ப்பீர்களாக இருந்தால் உங்களால் தவிர்க்கப்படவேண்டியவர்கள் உங்களை ஆழ்வார்கள்” எனும் பிளேட்டோவின் கூற்றுக்கமைவாக தனக்கு ஏற்பட்ட அநீதியினை ஏற்படுத்திய அரசியலுக்கு பொருத்தமற்றவர்களை  ஓரம் கட்டுவதற்கான ஒரு முயற்சி எனவும் குறிப்பிட்டார்.  தமிழ் பற்றுப் பற்றியும் மாவீரர்களின் தியாகங்கள் பற்றியும் எடுத்துரைத்தார். இம்முறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நான்கு ஆசனங்களைப் பெறவேண்டும் எனவும்  நல்ல தலைமைத்துவங்களை தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும் குறிப்பிடட்டார்.


மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்பான்மையினராக காணப்படுகின்ற தமிழர்கள் ஒரு தடவை மாத்திரமே நான்கு ஆசனங்களைப் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார். எங்களுடைய விகிதாசாரத்தின் படி நான்கு பிரதிநிதித்துவம் கிடைக்கவேண்டும் எனவும் குறிப்பிட்டார். அகிம்சைப் போராட்டம் அர்த்தமற்றதாகிய போதுதான் ஆயுதப் போராட்டம் தோற்றம் பெற்றதாகவும் குறிப்பிட்டார். இனியும் எமது உரிமைகளை நாம் இழந்துவிடக்கூடாது எனவும் எமது மக்கள் விரும்புகின்ற அபிவிருத்தியையும் சமாந்தரமாக கொண்டு செல்லவேண்டிய தேவை இருப்பதாகவும் குறிப்பிட்டார். அபிவிருத்தியும் உரிமையும் சமாந்தரமாகக் கொண்டு செல்லப்படவேண்டியவை எனக் குறிப்பிட்டார். எமது இளைஞர்கள் இன்று ஏமாற்றப்படுவதாகவும் குறிப்பிட்டார். குருக்கள்மடத்தைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர்கள் என்றும் சோடைபோகமாட்டார்களள் எனவும் தொடர்ந்து பேசுகையில் குறிப்பிட்டார். குருக்கள்மடத்துக்கும் தனக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதாகவும் பல நிகழ்வுகளில் இங்கு கலந்து கொண்டதாகவும் அதில் நாட்டுக்கூத்து அரங்கேற்றத்தை தான் விழித்திருந்து பார்த்ததாகசவும் குறிப்பிட்டார்.


தனது நண்பர் இராஜதுரையை  கொரோணா என்று வைத்தியசாலைக்கு அனுப்பியதாகவும் தான்  ஆறு மணித்தியாலங்களுக்கு கூட அவருடன் அருகில் இருந்ததாகவும் 150 க்கு அதிகமான மக்களை அன்றைய தினம்   சந்தித்ததாகவும் இதுவரையில் ஒருவருக்குக்கூட கொரோனா பரவவில்லை எனவும் விளக்கமளித்தார். இது திட்டமிடப்பட்ட பழிவாங்கல் எனவும் குறிப்பிட்டார். அவரை தனிமைப்படுத்தியமை பற்றியும் குறிப்பிட்டார்.  24 நாட்கள் தான் தனிமைப்படுத்தலில் தானகவே இருந்ததாகவும் விளக்கமளித்தார்.  இராஜதுரைக்கு உளவியல் ரீதியாக ன பாதிப்பை அவர்கள்  ஏற்படுத்தியதாகவும் சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களைப் போட்டு வட்டமிட்டுக் காட்டியதாகவும் தனது உரையில் குறிப்பிட்டார். புறக்கணிக்கப்படவேண்டியவர்களை மக்களாகிய நாம் கதிரைகளில் அமர்த்தியிருப்பதாகவும் குற்ப்பிட்ட இவா   சரியான தீர்ப்பினை மக்கள் வழங்கவேண்டுமெனவும் குறிப்பிட்டு  வீட்டுச் சின்னத்ததுக்கு நேரே புள்ளடியும் தனது இலக்கமான 6 ற்கு நேரே ஒரு புள்ளடியினை  இடுமாறும் கேட்டு  தனது உரையினை நிறைவு செய்தார். திரு.க.கர்ணாகரன் அவர்களின் நன்றியுரையுடன் மக்கள் சந்திப்பு நிறைவு பெற்றது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |