Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் கோயில் விஸ்தரிப்பு திருப்பணி நிகழ்வுகள்

மட்டக்களப்பு- கல்லடி இராமகிருஷ்ண மிஷனில் அமைந்துள்ள 50 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ இராமகிருஷ்ணர் ஆலயத்தின் புனருத்தாரண பணிகள் நேற்று (17.06.2020) புதன்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. இப் பணியின் தொடக்க நிகழ்வாக பூஜை, ஹோமம், பஜனை போன்ற ஆராதனைகள் இடம்பெற்றன.

ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷன் ஆலயத்தின் மண்டபத்தினை விரிவாக்கம் செய்வதற்காக இப் புனருத்தாரண பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 150 பேர் தியானம் செய்யக்கூடியவாறு அமைந்துள்ள இம் மண்டபத்தினை 500 பேர் தியானம் செய்யக்கூடியவாறு கட்டியமைக்க பக்தர்கள் கேட்டுக்கொண்டதற்கு அமைவாக புனருத்தாரண வேலைகள் தொடக்கிவிடப்பட்டுள்ளன.

சுமார் 15 மில்லியன் ரூபாய் செலவில் நடைபெறவுள்ள மண்டப விரிவாக்க பணிகளுக்கு பக்தர்கள் 5000 ரூப்பாய்க்கு மேற்பட்ட நன்கொடைகளை கொடுத்து இப் புண்ணிய காரியத்தில் பங்களிப்பு செய்ய முடியும்.

கட்டுமான வேலைகள் இடம்பெறும் காலங்களில் ஆலய வழிபாடுகளில் கலந்துகொள்ளும் பக்தர்கள் சுவாமி விபுலானந்தர் கட்டிய பழைய ஆலயத்தில் இடம்பெறும் பூஜை ஆராதனைகளில் கலந்துகொள்ளலாம்.

Post a Comment

0 Comments