நூருல் ஹுதா உமர்
கொவீட்-19 கட்டுப்பாடுகளினால் வாழ்வாதாரம் வீழ்ச்சியைடைந்த கல்முனை மாநகரில் அமைத்துள்ள “கிறீன் பீல்ட்” சுனாமி வீட்டுத்திட்ட குடியிருப்பு மக்களுக்காக கொழும்பு "ஹமீடியா" நிறுவனத்தினால் வழங்கப்பட்ட பால்மா பொதிகள் நேற்று பிற்பகல் பயனாளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.
இந்த பால்மா பொதிகளானது "கிறீன் பீல்ட்" கூட்டு ஆதன முகாமைத்துவக் குழுவின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஏ. கலீலுர் ரஹுமான் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, கிழக்கு மாகாண ஆளுநர் கௌரவ. அநுராதா யஹம்பத் அவர்களின் முயற்சியால் கொழும்பு "ஹமீடியா" நிறுவனத்தினால் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் திருகோணமலையில் வைத்து வழங்கப்பட்டது.
இந்த பால்மாவானது "கிறீன் பீல்ட்" பள்ளிவாசல் தலைவர் ஏ.எல். நபீர் மற்றும் செயலாளர் எம்.எச்.ஏ.கரீம் ஆகியோர் உட்பட முகாமைத்துவக் குழுவினரால் பகிர்ந்தளிக்கப்பட்டது. இந்த நிவாரணத்தை பெற்றுக்கொண்ட குடியிருப்பாளர்கள் இதனை சாத்தியப்படுத்திய அனைவருக்கும் மகிழ்வுடன் தமது நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
"கிறீன் பீல்ட்" வீட்டுத்திட்ட குடியிருப்பானது கல்முனையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அமையபெற்ற ஒரு அடுக்குமாடி வீட்டுத்திட்டமாகும் . இந்த குடியிருப்பு அமையப் பெற்று சுமார் பத்து வருடங்களில் குறிப்பிட்டு கூறுமளவுக்கு எவ்வித அபிவிருத்தியும் ஏற்படுத்தப்படாத இந்த நிலப்பரப்பில் வாழும் பெரும்பாலனவர்கள் இன்னும் வறுமைக்கோட்டின் எல்லைக்குள்ளேயே வழ்ந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 comments: