Home » » சுமந்திரனின் சதியில் சிக்கி கல்முனை மக்கள் மீண்டும் ஏமாற போகின்றார்களா? சப்ராஸ் மன்சூர் கேள்வியெழுப்புகிறார்.

சுமந்திரனின் சதியில் சிக்கி கல்முனை மக்கள் மீண்டும் ஏமாற போகின்றார்களா? சப்ராஸ் மன்சூர் கேள்வியெழுப்புகிறார்.நூருள் ஹுதா உமர்.

"2020 பாராளுமன்றம்" மொட்டுக்கட்சி ஆளுவது என்பது நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டிய விடயம். அதன் வெளிப்பாடே இன்று கல்முனை வாழ் தமிழ் மக்கள் தங்களது பிரதேச செயலகம் அவர்களுக்கு சாதகமாக அமைய வேண்டும் எனும் நோக்கத்துடன் இம்முறை கருணா அம்மனுடன் கை கோர்த்து நிற்கின்றனர் என கல்முனை மாநகர சபை உறுப்பினர் சப்ராஸ் மன்சூர் தெரிவித்தார்.

நேற்று மாலை சாய்ந்தமருதில் நடைபெற்ற தேசிய காங்கிரஸ் கட்சியை ஆதரித்து நடைப்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ஆளும் மஹிந்த தரப்பு மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம், ம.கா தலைவர் றிசாட் பதியுதீன் அவர்களின் கட்சிகளை ஆளும் தரப்புடன் இணைத்துக்கொள்ளமாட்டோம் என்று உத்தியோகபூர்வமாக அறிவித்து விட்டார்கள்.

இந்நிலையில் கல்முனை முஸ்லிம் மக்களின் நிலை என்ன?  20 வருடமாக கல்முனை தொகுதியின் தலைவராக இருந்த எச்.எம்.எம். ஹரீஸ் தனக்கு குறித்த துறை சார் அமைச்சு கிடைத்தும் கல்முனைக்கான தீர்வு அவரினால் கொண்டுவரப்படவில்லை.

சென்ற ஆட்சியில் சுமந்திரன் எனும் ஒரு பா. உறுப்பினர் எமது முஸ்லிம் கட்சிகளை விட பலம் பொருந்திய நிலையில் காணப்பட்டார். இன்றய நிலையும் அவ்வாறே உள்ளது. சஜீத் கூட்டமைப்பிலும் சுமந்திரனே செல்வாக்கு உள்ளவராக காணப்படுகிறார்.

இந்நிலையில் கல்முனை முஸ்லிம்களின் நிலை கேள்விக்குறியாகவே உள்ளது. வருகின்ற பாராளுமன்றில் ஒரு பலம் பொருந்திய அமைச்சராக தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா காணப்படுவார் என்பது நாம் அனைவரினதும் உள்ளம் சொல்லும் உண்மை.

இந்நிலையில் சாய்ந்தமருது மக்கள் தங்களுக்கான ஒரு பிரதிநிதியை தேசிய காங்கிரஸ் கட்சியோடு இணைத்து அதிகப்படியான வாக்குகளை அள்ளிவழங்குவதற்கு தயாராக உள்ளனர். அவ்வாறே மருதமுனை மக்களுடைய நிலைப்பாடும் காணப்படுகின்றது.

இந்நிலையில் கல்முனை மக்கள் மீண்டும் ஏமாற போகின்றார்களா?  இல்லை சாதுரியமாக தங்களின் நிலத்தை காப்பாற்ற போகின்றார்களா என்பது பற்றி நீங்களே முடிவு செய்ய வேண்டும். பாவம் கல்முனை பாதுகாக்கப்படவேண்டும்  என்று  போராடிய ஒரு பிள்ளை எமது வேட்பாளர்  றிசாட் செரீப் அவர்கள்.

உங்களை நம்பி, எமது நிலம் பாதுகாக்க படவேண்டும் எனும் நோக்கத்தில் தனது பதவி, தொழில், குடும்பம் அத்தனையும் திறந்து கல்முனை மண்ணுக்காக தே. கா.வுடன் தன்னை அர்பணித்துள்ளார்.

இதில் வெற்றி என்பதும் தோல்வி என்பதும் "ரிஷாட் செரீப்" என்னும் தனிமனிதன் அல்ல. கல்முனை மக்கள்தான் என்பதே உண்மை என்றார்.

இந்நிகழ்வில் பொதுத்தேர்தல் வேட்பாளர் ஏ.எல்.எம். சலீம், கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஏ.ஆர். அஸீம், ஏ.ஆர்.எம். அஸீஸ் ஆசிரியர், தேசிய காங்கிரசின் தேசிய கொள்கைபரப்பு இணைப்பாளர் யூ. எல்.என். ஹுதா, தேசிய காங்கிரஸின் தொழில்துறை செயலாளர் ஏ.சி.எம். நிஸார் மற்றும் சாய்ந்தமருது பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் இயக்குனர் சபை தலைவரும் ஓய்வுபெற்ற நிருவாக உத்தியோகத்தருமான உதுமாலெப்பை, நாவிதன்வெளி பிரதேச சபை முன்னாள் தவிசாளர் நதீர் ஆசிரியர் உட்பட பல  முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |